இஸ்ரேலிய தூதரக கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஸ்டிக்கர் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற வெடிகுண்டு தற்போதுதான் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்பு சம்பவ இடங்களில் வழக்கமாக கிடைப்பது போன்ற எந்த ஒரு பொருளும் டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவ இடத்தில் போலீசாருக்கு முதலில் கிடைக்கவில்லை. இதனால் சற்றே திணறிய போலீசாருக்கு குண்டுவெடித்த காரில் ஒரு வகையான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. சுதாரித்துக் கொண்ட போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தியனர்.
குண்டுவெடிப்புக்கு சற்று முன்னர் சிக்னல் ஒன்றில் இரண்டு இளைஞர்கள் இஸ்ரேலிய தூதரக காரில் ஸ்டிக்கரை ஒட்டியதும் தெரியவந்தது. காந்தத்துடன் கூடிய ஸ்டிக்கரில் வெடிகுண்டை இணைத்து ரிமோட் மூலம் இயக்கியுள்ளதும் அம்பலமானது. இத்தகைய ஸ்டிக்கர் வெடிகுண்டை பயன்படுத்தி இந்தியாவில் முதல் முறையாக குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதேநேரத்தில் இத்தகைய நவீன வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருப்பதால் வெளிநாடு ஒன்றின் சதி இருப்பதாகவும் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ஈரான் மற்றும் லெபனான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா என்ற இயக்கமே டெல்லி குண்டுவெடிப்புக்குக் காரணம் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் ஸ்டிக்கர் குண்டு பயன்படுதப்பட்டிருப்பது இஸ்ரேலின் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக இருப்பதாகவும் தேசிய புலனாய்வு முகமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment