கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் அனைத்து ரயில்களினதும் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தின் நிலையப் பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், மற்றும் ரயில் சாரதிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதை அடுத்தே அனைத்து ரயில்களினதும் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து ரயில் சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக ரயில் தரப்படுத்தல் தொழில் சங்க ஒன்றியம் தெரிவிக்கின்றது.
கோரிக்கைகள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு இன்று பிற்பகல் நான்கு மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளாரர்.
இதேவேளை, ரயில் சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்தை அடுத்து, பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment