அமைச்சர்கள் , ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களு இருநாள் இராணுவப் பயிற்சி
அமைச்சர்கள் உட்பட அனைத்து ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருநாள் இராணுவப் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியானது ஆரம்பத்தில் நுவரெலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக தியத்தலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு இப்பயிற்சி முகாம் மாற்றப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 03ஆம் திகதியளவில் இம்முகாம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கென தியத்தலாவ பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment