தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை கைப்பற்ற குறிபார்த்துக் கொண்டிருக்கின்றவர்களில் ஒருவரான சுரேஸ் பிறேமச்சந்திரனால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற பெரும்பாலான அரசியல் எதிர்வு கூறல்கள் தவறானவை என்ற முடிவுக்கு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வந்துள்ளது.
சுரேஸ் பிறேமச்சந்திரன் கடுமையான எதிர்வு கூறல்களை முன்வைப்பார் என்றும் ஆனால் அவரால் முன்வைக்கப்படுகின்ற எதிர்வு கூறல்களில் அநேகமானவை ஒருபோதும் நடந்ததாக இல்லை என்றும் தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
இந்த ஆவணம் 2005 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி அனுப்பப்பட்டு உள்ளது என விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment