அவுஸ்திரேலியாவில் வைத்தியசாலைக் கட்டிடமொன்றிலிருந்து வீழ்ந்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குணமடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மெல்பேர்ன் நகரில் அவரில் தங்கியிருக்கும் ஹொட்டேலிலிருந்து இது தொடர்பாக தேசியத் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து கூறுகையில்.
எனது புதல்வனின் சிகிச்சைக்காக நாங்கள், மெல்பேர்ன் நகருக்கு விஜயம் செய்தோம். இதன்போது நாங்கள் தங்கியிருந்த பலகணியின் கதவு இருக்கமாக மூடப்பட்டிருந்தது. அதை நான் திறக்க முயன்றபோது, வழுக்கி விழுந்தேன். மூன்றாவது மாடியின் மேலிருந்து நான் கீழே விழுந்தேன். அனேகமானோர், நான் படுகாயமடைந்திருக்கலாமென, கருதினர். தற்போது எனக்கு இரண்டு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்றுமொரு சத்திர சிகிச்சை இடம்பெறவுள்ளது. நான் விரைவில் பூரண குணமடைந்து விடுவேன் என, நினைக்கின்றேன். விரைவில் தாயகம் திரும்புவேன் என, நான் எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment