Wednesday, February 22, 2012

யாழில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

யாழ் குடாநாட்டில் முதியவர்கள், இளைஞர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்யும் சம்பவங்கள் தினமும் நடைபெற்றுவருகின்றன என யாழ்.போதனா வைத்திய சாலை மரணப்பதிவு அலுவலகப் புள்ளிவிபரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. தற்கொலை செய்துகொள்பவர்களில் தனிமையாக வாழ்ந்தவர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நேற்று கோண்டாவில் இருபாலைப் பகுதியில் பழனி ஆண்டவர் கோயிலுக்கு அண்மையாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில்தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

31 வயதுடைய இராசலிங்கம் ராஜ்குமார் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவர். இவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார். சடலமாக மீட்க்கப்பட்டவர் சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிற்கு பயணம் செய்து யாழ்ப்பாணம் திரும்பியவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சி கரவெட்டி அத்துளு அம்மன் ஆலயப் பகுதியில் 78 வயதுடைய வேலாயுதம் சிற்றம்பலம் என்பவர் தூக்கில் தொங்கியுள்ளார்.

கடந்த வருடமும் தற்கொலை செய்துகொண்டவர்களின் பட்டியலில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை புள்ளிவிபரங்கள் மூலம் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணங்களையும், அதனை நிறுவத்துவதற்குரிய செயற்பாடுகளில் சமூக ஆர்வலர்கள் ஈடுபடவேண்டும் பொது மக்கள் கருத்துவெளியிட்டுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com