சரத் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் அரசாங்கத்துடன் இடம்பெற்று வருகின்ற பேச்சுவார்த்தையானது சாதகமான வகையில் அமைந்துள்ளதாக இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின்போது அனோமா பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்கத் தயாரில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சரத் பொன்சேகாவை விடுதலைசெய்மாறு வலியுறுத்தி
இம்மாதம் 8 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தான் தலைமை தாங்ங தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 8 ஆம் திகதி சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைவதையிட்டு நீதிமன்றம் முன்பாக எதிர்ப்பு நடவடிக்கையொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment