Wednesday, February 22, 2012

பின்லாடனைக் காட்டிக் கொடுத்த டாக்டருக்கு தங்க பதக்கம்?

பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒசாமா பின்லாடன் ஒளிந்திருந்ததைக் காட்டிக் கொடுத்த டாக்டர் ஷகீல் அப்ரிடிக்கு, அமெரிக்க காங்கிரசின் தங்க பதக்கம் அளித்து கவுரவிக்க வேண்டும் என, காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கோரியுள்ளார். அமெரிக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் டனா ரோரபேச்சர், சமீபத்தில் பலுசிஸ்தானுக்கு சுயாட்சி உரிமை கோரி காங்கிரசில் மசோதா தாக்கல் செய்து பரபரப்பைக் கிளப்பியவர்.

அதோடு, அமெரிக்காவின் எதிரியான பாகிஸ்தானுக்கு இரு முகங்கள் உண்டு என, கடும் விமர்சனம் செய்து பாகிஸ்தானின் எரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டவர்.

இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில்,"பின்லாடன் எங்கிருக்கிறார் என, அமெரிக்காவிற்கு தெரிவித்த டாக்டர் அப்ரிடிக்கு காங்கிரசின் தங்க பதக்கம் அளிக்கப்பட்டு, அவர் அமெரிக்க குடிமகனாக ஆக்கப்பட வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். பாக்., ஐ.எஸ்.ஐ.,யால் கைது செய்யப்பட்ட பின், தற்போது வரை எங்கிருக்கிறார் என, அப்ரிடி பற்றி தெரியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com