Wednesday, February 1, 2012

மனித உரிமைகள் மாநாட்டில் எந்த சவால் வந்தாலும் எதிர்கொள்ளத்தயார். அரசாங்கம்.

சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது மேற்கொள்ளப்படும் எந்தவொரு சவாலுக்கும் வெற்றிகரமாக முகம் கொடுப்பதற்கு அமர்வில் பங்கு கொள்ளவுள்ள பிரதிநிதிகள் தயாராகவிருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்தார்.  

அமெரிக்கா தலைமையிலான ஐரோப்பிய நாடுகள் சில இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் தொட்ர்பான பிரேணைகளை கொண்டு வருவதற்கு தயாராகி வருவதாக தெரியவந்துள்ளதுதாக தெரிவித்துள்ள அவர் அவ்வாறானதொரு பிரேரணை முன்வைக்கப்பட்டால் உரிய பதிலை வழங்குவதற்கு தாயராக இருப்பதாகவும் உலகில் எந்தவொரு நாட்டிற்கோ அல்லது அமைப்பிற்கோ அஞ்சாமல் பதிலடி கொடுக்கப்படும் எனவும் கருணாதிலக்க அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து ஏனைய நாடுகளுக்கு உதாரணமாக திகழும் இலங்கையை, ஏனைய நாடுகள் கௌரவிக்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment