நீர்கொழும்பு அல் ஹிலால் மத்தியக் கல்லுரி மாணவர்களுக்கான தலைமைத்துவ வதிவிட செயலமர்வு அண்மையில் கல்லுரியில் நடைபெற்றது
இச் செயலமர்வு தரம் 10 முதல் 13 வரையான வகுப்புக்களில் பயிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்காக மூன்று தினங்கள் நடத்தப்பட்டன.
உளவியல் ஆசிரிய ஆலோசகர்களான எம்.டி.எம்.ஹாசிம் ,ஹைதர் அலி, விஜேரத்ன மற்றும் கல்வி அமைச்சின் சமூக உளவியல் துறை செயற்றிட்ட அதிகாரியான எம்.ஜே.எம்.சனீர் ஆகியோர் இந்த செயலமர்வில் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
கல்லூரி அதிபர் எம்.எம்.கஸ்ஸாலி தலைமையில், பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் இந்த வதிவிட செயலமர்வுக்கு உரிய வசதிகளை செய்து கொடுத்து ஒத்துழைப்பை வழங்கினர்.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment