எல்லையில் இந்திய இராணுவத்தின் படுகொலைகள், சத்திரவதைகள் அதிகரிக்கின்றது.
அமெரிக்காவிடம் பங்களாதேசம் முறைப்பாடு.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையால் படுகொலை செய்யப்படும் வங்கதேசத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கிடம் அந்நாடு புகார் தெரிவித்துள்ளார். ராபர்ட் பிளேக்குடனான சந்திப்பின் போது வங்கதேச பிரதமரின் ஊடக உதவி செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
"வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் படுகொலைகளும் சித்திரவதைகளும் குறைத்துக் கொள்ளப்படும் என்று இந்தியா பலமுறை உறுதி அளித்திருந்தது. ஆனால் இத்தகைய உறுதிமொழிகளை அந்நாடு கடைபிடிக்கவில்லை" என்று பிளேக்குடனான சந்திப்பின் போது ஹசீனா தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
வங்கதேச நாட்டவரை வடகிழக்கு மாநில தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் இந்தியப் படைகள் வேட்டையாடுவதாகவும் ஹசீனா கவலை தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைவர், வங்கதேச எல்லையில் நடைபெறும் படுகொலைகளை முற்றிலுமாக நிறுத்திவிட முடியாது என்று கூறியிருந்தார். இதற்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
டாக்கா(வங்கதேசம்): இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையால் படுகொலை செய்யப்படும் வங்கதேசத்தவரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் ராபர்ட் பிளேக்கிடம் அந்நாடு புகார் தெரிவித்துள்ளார்.
ராபர்ட் பிளேக்குடனான சந்திப்பின் போது வங்கதேச பிரதமரின் ஊடக உதவி செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
"வங்கதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் படுகொலைகளும் சித்திரவதைகளும் குறைத்துக் கொள்ளப்படும் என்று இந்தியா பலமுறை உறுதி அளித்திருந்தது. ஆனால் இத்தகைய உறுதிமொழிகளை அந்நாடு கடைபிடிக்கவில்லை" என்று பிளேக்குடனான சந்திப்பின் போது ஹசீனா தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
வங்கதேச நாட்டவரை வடகிழக்கு மாநில தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் இந்தியப் படைகள் வேட்டையாடுவதாகவும் ஹசீனா கவலை தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைவர், வங்கதேச எல்லையில் நடைபெறும் படுகொலைகளை முற்றிலுமாக நிறுத்திவிட முடியாது என்று கூறியிருந்தார். இதற்கு வங்கதேச வெளியுறவு அமைச்சகம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது..
0 comments :
Post a Comment