அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பதிலாக மீனவர்களுக்கு அரசாங்கம் வழங்குவதாக அறிவித்துள்ள மண்ணெண்ணை மானிய தொகைக்கு நீர்கொழும்பு மீனவர்கள் இன்று இணக்கம் தெரிவித்துள்ளனர் .
இதற்கான தீர்மானம் இன்று பிற்பகல் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மேல் மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா ,பிரதி அமைச்சர் சரத்குமார குணரட்ன , மேயர் அன்ரனி ஜயவீர , கத்தோலிக்க மதத் தலைவர்கள் , மற்றும் மீனவர் சங்கங்கள் சிலவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
நாளைய தினம் முதல் நீர்கொழும்பு எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீர்கொழும்பு மீனவர்கள் அதிகரித்துள்ள மண்ணெண்ணை விலை 35 ரூபாவுக்கு பதிலாக ,25 ரூபா விலை குறைத்து 81 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் எனவும்,அதற்கான வேலைத்திட்டம் நாளை காலை அறிவிக்கப்படவுள்ளது .எனவும் கடற்கரைத் தெரு ஐக்கிய மீனவர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார் .
இதேவேளை இன்றைய தினமும் நீர்கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ,கலகம் அடக்கும் பிரிவினரும் குவிக்கப்பட்டிருந்தனர் .
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
No comments:
Post a Comment