இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகியோர் பயணம் செய்த விமானம் தரையிறங்கும்போது மற்றொரு விமானத்தின் மீது மோதாமல் அதிர்ஷ்டவசமாகத் தப்பியது. ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோர் கோபென்ஹேகனில் இருந்து லண்டன் வந்தனர். அவர்களின் விமானம் தரையிறங்கும் தளத்தில் ஏற்கெனவே ஒரு விமானம் நின்று கொணடிருந்தது. இதைப் பார்த்த விமானி மீண்டும் விமானத்தை மேலே கொண்டு சென்று வானில் வட்டமிட்டார்.
இதனால் இரண்டு விமானங்கள் மோதும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் வில்லியம் மற்றும் கேட் ஆகியோருக்கு காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும் இருவரும் அதிர்ச்சி அடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்னொரு விமானம் ஓடுதளத்தில் இருந்து புறப்படாததால் வில்லியம் வந்த விமானத்தை சிறிது நேரம் வானில் வட்டமிடுமாறு கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்று பிரிட்டிஷ் ஏர்வேஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால் இது குறித்து இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் கருத்து தெரிவிக்கவில்லை.
No comments:
Post a Comment