Sunday, February 5, 2012

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளை யாழ்..விஜயம் புதிய திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாளைய தினம் யாழ்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ்ப்பாணத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்ட வைத்தியசாலைக்கட்டிடம் மற்றும் நீச்சல் தடாகம் என்பவற்றை திறந்து வைக்கவுள்ளார்.

நாளை காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம்செய்யும் ஜனாதிபதி காலையில் இடம்பெறும் விஷேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து யாழ்.மத்தியகல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய நீச்சல் தடாகத்தை திறந்து வைக்கவுள்ளார்.

யாழ்.மத்தியகல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் புல்வருமான நாமல் ராஜபக்சவின் முயற்சியினால் அமைக்கப்பட்டதாகும்.

இதனைத் தொடர்நது சாவகச்சேரியில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியர் விடுதி நோயாளர்களுக்கான ஆண்கள் விடுதி மற்றும் ஏனை மருத்துவ விடுதி என்பவற்றையும் திறந்து வைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தி, மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க, அரசாங்கம் கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளது. பயஙகரவாத செயற்பாடுகள் ஒழிக்கப்பட்டதன் பின்னர், யாழ். மாவட்டத்தில் சகல வசதிகளும் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

யாழ். நகர், சனநெரிசல் மிக்க நகராக மாற்றம் பெற்றுள்ளது. கல்வி உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்ய, கடந்த காலங்களில் அரசாங்கம் கணிசமான நிதியை செலவிட்டது. இன்று இதன் பயன்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

யாழ். மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் சீர் செய்யவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று மாவட்ட செயலகங்கள் மூலம் மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு, துரித தீர்வுகள் கிடைக்கின்றன. பாடசாலைகளில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்தும் பின்தங்கிய பாடசாலைகளை கட்டிடியெழுப்புவதற்காக, அரசாங்கம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய, யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்தும் நோக்கில், நாளை நண்பகல் 12 மணிக்கு யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் வட மாகாண அபிவிருத்தி ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் வட மாகாணத்துக்கான சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளுராட்சி மன்ற தலைவர்களும் கலந்துக் கொள்ளவுள்ளனர். அத்தோடு இந்நிகழ்வில் முக்கிய மத்திய செயலாளர்கள் மற்றும் மாகாண சபை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என அனைவரும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

1 comment:

  1. WELLCOME OUR GREAT PRESIDENT , Tell that fool jaffnas its year 2012 and not 1976.
    THANKS
    Arya

    ReplyDelete