கட்சியை தம்பியிடம் கையளித்து சென்றுள்ளார் டக்ளஸ். உள்ளே முறுகல் நிலை
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி எனும் ஈபிடிபி யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய நாடுகள் சபையின் 19 மனித உரிமைகள் பேரவையில் அரச பிரதிநிதியாக கலந்து கொள்வதற்கு ஜெனீவான சென்றுள்ளார். அவர் ஜெனிவா செல்லும்போது கட்சியின் பொறுப்புக்கள் யாவற்றையும் அவரது சகோதரன் தயானந்தாவிடம் கையளித்து விட்டுச் சென்றுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
நேற்று ஜனாதிபதி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் டக்ளசின் சகோதரன் தயானந்தா ஈபிடிபி சார்பில் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. ஈபிடிபி யினுள் உள்முரண்பாடுகள் வலுத்து யாழ் மாவட்டத்தின் பிரதான செயற்பாட்டாளர்கள் வெளியேறியுள்ள சந்தர்ப்பத்தில் இச்சந்திப்பில் தயானந்தா கலந்து கொண்டது கட்சி வட்டாரங்களில் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக அறியமுடிகின்றது.
கட்சியினுள்ள இரண்டாம் தலைமை ஒன்று இருக்ககூடாது, அவ்வாறு ஒன்று உருவாகக்கூடிய ஏது நிலைகளுக்கும் இடம் கொடுக்கக்கூடாது என்ற பிரபாகரனின் சித்தாந்தத்தை கடைப்பிடித்து வருபவர்தான் டக்ளஸ் தேவானந்தா. ஈபிடிபி யில் எவரும் தொண்டர்களாக இருக்க முடியுமே தவிர எல்லாப்புகழும் எந்தன் ஒருவனுக்கே என்று ஆட்சி நடாத்தி வருகின்றார் என்பதும் இரண்டாம் தலைமைக்கு போட்டியிடக்கூடியவர் என்ற நிலையில் இருந்த அர்புதராஜா வின் கொலையில் சந்தேகங்கள் எழுந்திருந்ததும் யாவரும் அறிந்ததே.
0 comments :
Post a Comment