மாலை தீவில் ஏற்பட்டுள்ளதைப் போன்று ஒரு கிளர்ச்சி விரைவில் இலங்கையிலும் ஏற்படும் என்று சரத் பொன்சோகா தெரிவித்துள்ளார்.
வைத்திய சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
அழகான நாடொன்றை உருவாக்கி தருவேன்.19 வருடங்கள் சென்றாவது அதனை உருவாக்கித் தருவேன். கடந்த 8 ஆம் திகதி என்னை விடுதலை செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்த அனைவருக்கும் எனது நன்றிகள். .மக்களின் எழுச்சி வெற்றி பெற்று, தற்போது அது தெற்காசிய நாடுகளுக்கும் பரவி, மாலை தீவுக்கும் அது சென்றுள்ளது .
இலங்கையிலும் மக்கள் கிளர்ச்சி வரக்கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment