நாட்டில் திடீரென ஏற்பட்டிருக்கும் கால நிலையில் மாற்றத்தினால் ஒருசில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணிநேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை பொத்துவிலில் 115.5 மில்லி மீற்றர்களாக பதிவாகியுள்ளது.
காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக கிழக்கு, வடக்கு, வட மத்தி, ஊவா, மலையகத்தின் கிழக்கு பகுதி ஆகிய பிரதேசங்களில் இடையிடையே மழை பெய்யும். ஏனைய பிரதேசங்களில் பிற்பகலிலோ, மாலை வேளையிலோ இடி மின்னலுடன் மழை பெய்யும்.
இச்சமயங்களில் சிலவேளைகளில் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்கும் வளிமண்டலத் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment