அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச்செயலர் மரியா ஒட்டேரோ மற்றும் உதவி இராஜாங்கச் செயலர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் இலங்கை வந்துள்ளனர். நேற்று இரவு 8 மணியளவில் இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அறியமுடிகின்றது.
இக்குழுவினர் முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. அமெரிக்க குழுவினரைச் சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் மாத்திரமே கலந்து கொள்ளவுள்ளதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஓரம்கட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment