Thursday, February 2, 2012

ஹயசிலிருந்து விழந்து படுகாயமடைந்த சிறுமி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதி

ஹயஸ் வாகனத்திலிருந்து தவறி விழுந்த மாணவியொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் ஜீவா லோசினி வயது 5 என்ற சிறுமியே இவ்வாறு தவறி விழுந்தவராவார். இவர் திருமண நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக கொக்குவிலிருந்து நாவற்குழி நோக்கி செம்மணி வீதியூடாகச்சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றது.

வாகனத்தில் கதவின் கை பிடியை பிடித்து இவர் விளையாடிக்கொண்டிருந்ததாகவும் திடீரென்று வாகனத்தின் கதவு திறந்து மாணவி விழந்ததாலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment