யாழ். வலிகாமம் வடக்கு கொல்லங்கலட்டி பகுதியில் நீண்டகாலப் பாவனையற்ற கிணற்றிலிருந்து மனித எலும்பு எச்சங்கள் சில நேற்றும் இன்று காலையும் காங்கேசன் துறைப்பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளன.
அண்மையில் மக்கள் மீளக்குடியமர்ந்த கொல்லங்கலட்டி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலுள்ள நீண்ட காலம் பாவிக்கப்படாதிருந்த கிண்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த மல்லாகம் நீதிவான் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதோடு உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக எச்சங்களை அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
மீட்கப்பட்ட எச்சங்கள் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment