Monday, February 13, 2012
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் பகீஸ்கரிப்பு -CTB ஊழியர்களுக்கான விடுமுறைகள் இரத்தாகின.
எரிபொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் நடாத்தும் காலவரையறையற்ற சேவை பகீஸ்கரிப்பிற்கு யாழ்.பிராந்தியமும் தனது ஆதரவை வழங்கி வருகின்றது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் நாடாளவிய ரீதியில் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்தே எரிபொருள் விலையேற்றத்தினால் நாளாந்தம் ஏற்படும் நட்டத்தினை ஈடு செய்ய இயலாத நிலையிலேயே நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக யாழ்.பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணையமும் இப்போராட்டத்தில் இணைந்து கொண்டு தனது ஆதரவை வழங்கியுள்ளது.
இதன்படி யாழ்.பிராந்தியத்தின் நிர்வாகத்தின் கீழ் சேவையில் ஈடுபடும் சிற்றூர்திகள் வெளிமாவட்ட சேவையில் ஈடுபடும் பெருந்துகள் உள்ளிட்ட அனைத்து சிற்றூர்திகளும்; இன்று முதல் மறு அதிவித்தல் வரும் வரை சேவையில் ஈடுபடமாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் மேற்கொள்ளும் சேவை பகீஸ்கரிப்பை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையின் சகல ஊழியர்களுக்குமான விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment