Wednesday, February 8, 2012

சட்டப்பேரவையில் ஆபாச படம் பார்த்த அமைச்சர்கள் பதவிவிலகல்.

கர்நாடக சட்டப்பேரவையில் கையடக்கத்தொலைபேசியில் ஆபாச படம் பார்த்ததாக பா.ஜ.க அமைச்சர்களான லக்ஷ்மன் சவேதி, சி.சி பாட்டீல், கிருஷ்ணா பால்மர் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு அதற்கு ஆதரமாக காணொளிப்டடமும் வெளியாகியனது இதனை தொடர்ந்து இம்மூன்று அமைச்சர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

அத்துடன் இவர்கள் ஆபாசப்படம் பார்க்கும் காட்சி வெளியிடப்பட்டதால் கர்நாடக பா.ஜ.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டதுள்ளது.இதனை தொடர்ந்து பா.ஜ.க.இன்று அவரசமாகக் கூடி ஆலோசனை நடத்தியதுடன்.ஆபாசப் படத்தை பார்த்ததாக குற்றஞ்சாட்ட மூன்று அமைச்சர்கள் மீதும் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்தது

இதனையடுத்து இம்மூன்று அமைச்சர்களையும் இராஜினாமாச் செய்யும் படி பா.ஜ.க. மேலிடம் உத்தரவிட்டதனால் இம்மூன்று அமைச்சர்களும் தங்களது இராஜினாமாக் கடிதங்களை கர்நாடக முதலமைச்சர் சதானந்தா கவுடாவிடம் ஒப்படைத்தனர்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com