ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவிற்கு, பாதுகாப்பு வழங்கி, கொழும்பிலிருந்து கண்டி நோக்கி சென்ற வாகனப் பேரணியின் 4 வாகனங்கள், ஒன்றுடன் ஒன்று மோதுண்ட போது, அதில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளனர். பேராதனைக்கும், பிலிமத்தலாவைக்கும் இடையே உள்ள ரயில் வீதிக்கு சமீபமாக, ஜனாதிபதியின் பாரியார் பயணம் செய்தவாகனத்திற்கு முன்னால் சென்ற ஜீப் வண்டி, திடீரென நிறுத்தப்பட்ட போது, பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதியின் பாரியார் பயணம் செய்த வாகனத்திற்கும் சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். பின்னால் சென்ற வாகனங்களில் பயணம் செய்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும், பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த பெண், கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த பாதுகாப்பு உத்தியோகத்தர், கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
No comments:
Post a Comment