Monday, February 27, 2012

இலங்கையை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது - ரணில் விக்ரமசிங்க

மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், படாவிட்டாலும், நாட்டின் ஜனாதிபதியோ, பாதுகாப்பு தரப்பினரோ சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படாது என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாம் பிரதமராக இருந்த காலத்தில், இது தொடர்பான ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் கைத்சாத்திடவில்லை எனவும், எனவே இலங்கையை சர்வதேச யுத்த குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படுவதாக கூறப்படுகின்றமை தொடர்பில், கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தம்மாலேயே இலங்கை அரசாங்கம் சர்வதேச யுத்தகுற்ற நீதிமன்றத்துக்கு செல்லாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தம்மால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment