Wednesday, February 8, 2012

ஆங்கில மொழியில் உயர் கல்வியை பயிலுவதற்கு, வாய்ப்பு வழங்கத் தீர்மானம்.

சிங்கள மற்றும் தமிழ் மொழிகளுக்கு பதிலாக, உயர்கல்வியினை ஆங்கில மொழியில் பயிலும் விதத்தில் பல்கலைக்கழக கட்டமைப்பு, நவீன மயப்படுத்தப்படுமென, அமைச்சர் எஸ்.பி. திசநாhயக்க தெரிவித்துள்ளார். ஹங்குரங்கெத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர், பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை தெரிவுசெய்யும்போது, மிகச்சிறந்த 22 ஆயிரம் பேரே, தெரிவு செய்யப்படுகின்றனர் எனவும் அவ்வாறு தெரிவு செய்யப்படும் 22 ஆயிரம் பேர், பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும்போது, அவர்களில் 60 வீதமானோருக்கு, சந்தையில் கேள்வி, மதிப்பு அல்லது தொழிலொன்றை பெற்றுக்கொள்ள முடியாதுவிட்டால், அதற்கு அரசாங்கம் என்ற வகையில், நாங்கள் பொறுப்புக்கூற கடமைப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில் உபவேந்தர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்களும், இதற்கு பொறுப்புக்கூற கடமைப்பட்டவர்கள் எனவும் நாட்டில் அமுலில் உள்ள கல்வி முறையும், இதில் பெரும் பங்கு வகிக்கின்றது எனவும் கல்வி முறையில் நாம் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக துரித நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. அனைத்து கற்கை நெறிகளும், ஆங்கில மொழி மயமாக்கப்படுகின்றது. கலைப்பீடத்தில் ஆங்கில கௌரவ பட்டம், மும்மொழி கௌரவ பட்டம், தகவல் தொழில்நுட்ப கௌரவ பட்டம், போன்றவற்றை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளை, நாம் ஆரம்பித்துள்ளோம். இக்கற்கை நெறிகளுக்கு சர்வதேசத்தின் மத்தியில், பெரு வரவேற்பு உள்ளது எனக்கூறிய அமைச்சர் திஸாநாயக்க பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்கள், அங்கிருந்து வெளியேறும்போது, தொழிலுக்காக அரசியல் வாதிகளின் பின்னால் செல்லும் வாய்ப்புக்கு, இடம் வைக்க மாட்டோம் எனவும் இதுவே தமது லட்சியம் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment