Monday, February 13, 2012

இலங்கைக்கு உதவுமாறு ஒபாமாவிற்கு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் அழுத்தம்.

மூன்று தசாப்த யுத்தத்தை நிறுத்தி அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை  ஆரம்பித்துள்ள இலங்கைக்கு உதவுமாறு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேர் ஜனாதிபதி ஒபாமாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையின் அபிவிருத்தி தற்போது உலகின் அவதானத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா இலங்கையுடன் முன்னரை விட இருதரப்பு உறவுகளை பலப்படுத்த வேண்டுமெனவும் அப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அமெரிக்க காங்கிரஸ் சபை பிரதிநிதிகளால் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள இவ் அறிக்கையில் அமெரிக்காவின் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க காங்கிரஸில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களும் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமென அமெரிக்காவிற்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

  பயங்கரவாதம் காரணமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இப்பிரதிநிதிகள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர். தங்களின் இலங்கை விஜயத்தின் போது இவ்விடயத்தை தாங்கள் அவதானித்ததாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com