புலிபிடிக்குது என்று ஒடி கனடாவில் எலியாய் நுழைந்தவர்களே பின்னர் புலியாய் நெஞ்சை நிமிர்தினர்.
அனைத்துலகத் தமிழர் மாநாடு - கனடா பெப்ரவரி 18 - 19 , 2012
கனடிய தமிழர் தேசிய அவை (National Council of Canadian Tamils)(NCCT)
கனடாவில் தமிழர்கள் அதிகளவில் வரத் தொடங்கிய நாட்களில் இருந்த அமைப்புக்கள் "ஈழ அமைப்புக்களாக" இருக்கவில்லை. அந்த அமைப்புக்கள் சிங்களவர்களின் சங்கங்களுடன் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். 1983 கலவரத்தின் பின்னரே இந்த தமிழ் சிங்கள அமைப்புக்களிடையே இடைவெளி அதிகரித்துக் காலப் போக்கில் உறவே இல்லாது போய் விட்டது.
புலிகளுக்கு ஆதரவு என்பது தொடங்கியவுடனும் ஆயிரக் கணக்கில் தமிழர்கள் கனடாவுக்கு வரத் தொடங்கிய பின்னரும் புலி விளையாட்டு புதிய பரிமாணங்களைத் தொட்டது. உலகத்தமிழர் இயக்கம் பிறந்த பின்னர் அடாவடிகளும் ரவுடித்தனங்களும் தமிழர்களிடையே அதிகரித்தன. புலிகளை வாழ்நாளில் கண்டிராதவர்கள் அல்லது புலி பிடித்துவிடும் என்று ஓட்டம் பிடித்தவர்கள் அல்லது சந்தர்ப்பத்தை பயன் படுத்தி அகதியாகியவர்கள் என்போர்தான் கனடாவில் புலி என்று நெஞ்சை நிமிர்த்தினார்கள். உதாரணத்துக்கு மொட்டை ரஞ்சன், மாதகல் கண்ணன் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
பின்னர் பிள்ளைகள் ஸ்பொன்சர் செய்து வந்த யாழ்ப்பாணத்து இளைப்பாறிய பென்சன் கேஸ்களும் இந்த புலிப் பிரவாகத்தில் கலந்து கொண்டனர். புலிகளின் பங்காளிகளான பாதிரிகளும் தமிழர் அமைப்புக்களில் புகுந்து தங்கள் பங்குக்கு புலிக் கோஷம் எழுப்பினார்கள்.
NACT, FACT என்ற குழுக்களும் உதயமாகி புலி கூத்துக்கு உரமூட்டினார்கள். உலகத்தமிழ இயக்கம் என்பது பலம் வாய்ந்த ரவுடிக் கும்பலாகப் பரிணமித்த பின்னர் கனடாவில் புலிக்கு எதிராக பேசினால் சண்டித்தனம் என்பது நியதியாகிவிட்டது. தமிழர்களிடம் பணம் பறிப்பதே பிரதான தொழிலாக இருந்தது. உலகத்தமிழர் இயக்கம் பல கமிஷன் ஏஜெண்டுகளை நியமித்து வீடுவீடாக வசூலில் இறங்கியது. புலி என்றவுடன் பலர் பயம் காரணமாகவும், சிலர் "கவுரவம்" என்றும் நினைத்து பணத்தைக் கொடுத்துள்ளனர்.
தமிழ் குடிவரவாளர்களின் நலன்களுக்கு பணியாற்றுகிறோம் என்று கனடா தமிழீழச் சங்கம் போன்ற அமைப்புக்கள் கனடிய அரசுகளிடமிருந்து மில்லியன் கணக்கில் உதவிகள் பெற்று அந்தப் பணத்தை சுருட்டி வாயில் போட்டு சங்கத்தையே வங்குரோத்து அடித்தார்கள்.
பின்னர் ஐரோப்பாவில் தூள் கடத்தல் ஆட்கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு அந்த நாடுகளின் போலீசார் துரத்த கனடா ஓடிவந்து அகதியானவர்கள் பலர். அவர்களில் சுரேஷ் மாணிக்க வாசகன் தன்னை வன்னியில் இருந்து அனுப்பியதாக கூறியவுடன் அவனை உலகத்தமிழர் இயக்கத்துக்குத் தலைவர் ஆக்கி கனடா தமிழீழச் சங்கத்தில் அறையும் கொடுத்து கட்டிலும் போட்டு பட்டப் பகலில் "பலான" வேலைகள் நடத்தவும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பின்னர் அவன் முதலுக்கே மோசம் என்று தெரிந்தவுடன் பொலிசாரிடம் மாட்டியும் விட்டனர்.
புலிகளை வன்னிக்கு ஜானக பெரேரா துரத்திய பின்னர் கனடாவில் தோன்றிய இளம் தலை முறை ரம்போ படம் பார்த்தவர்களாக பரவசப்படத் தொடங்கினர். வன்னியுடன் தொடர்புகளும் ஏற்படத் தொடங்கியது. கனடிய பலகலைக் கழகங்களில் கிடைத்த கோப் ப்ரோகிராம் வசதிகளை வன்னியில் காட்டி புலிகளுடன் படமெடுத்து கனடாவில் ஒரு கூட்டம் தங்களை மேதாவிகளாக காட்டத் தொடங்கியது. அப்பொழுதுதான் கனடிய அரசு விழித்துக் கொண்டது. உலகத் தமிழர் இயக்கத்தைத் தடை செய்தது. இந்த தடையுடன் புலி என்று வலம் வந்த பலர் துண்டைக் காணோம் துணியை காணோம் என்று அடித்த காசுகளுடன் கடை கண்ணி என்று போட்டுக் கொண்டு நல்ல பிள்ளைகளானார்கள்.
புலிகள் வன்னியில் அழிந்தவுடன் கனடாவிலுள்ள புலிவேஷம் போட்டவர்களுக்கும் உண்டியல் கோஷ்டிகளுக்கும் பலத்த அடி விழுந்தது. உருத்திர குமாரனின் கடல் கடந்த ஈழம் தொடங்கியவுடன் உஷாராகிய அந்த கும்பல்கள் தேர்தல் என்றும் பல விளையாட்டுக்களைக் காட்டினார்கள். மொத்தத்தில் இவர்களின் நோக்கம் எப்படி தமிழனிடம் இருந்து சுருட்டுவது என்பதுதான்.
உலகத்தமிழர் இயக்கத்தின் உண்டியல் கோஷ்டிகள் தங்களுக்குள் தேர்தல் வைத்து கனடிய தமிழர் தேசிய அவை என்று என்று ஒன்றை பதிவு செய்தனர். உருத்திரகுமாரன் தன்னை பிரதமராக்கவில்லை என்ற கடுப்பில் திருச்செல்வம் கோஷ்டி தனியாக இன்னொரு கடல்கடந்த ஈழம் பிரகடனம் செய்து திருச்செல்வம் இப்பொழுது அதன் பிரதமர் ஆகியுள்ளமை இன்னொரு தமாஷ்.
உலகத்தமிழர் இயக்கத்தின் தமிழ், நேரு குணா, கமலவாசன் ஆகியோர் இப்பொழுது திருச்செல்வத்தின் பங்காளிகள். நேரு குணாவின் கட்டுப்பாட்டில் உள்ள உண்டியல் கோஷ்டிகளும், மாணவர் கோஷ்டிகளும் கனடிய தமிழர் தேசிய அவையின் முக்கிய அங்கங்கள்.
உலகத்தமிழர் இயக்கத்தில் இருந்து தங்களது பெயர் பெரியளவில் "நோண்டி" யானதையடுத்து முற்றாகப் புது முகங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டதுதான் இந்த கனடிய தமிழர் தேசிய அவை. நட்டுவன் பிள்ளைக்கு நோட்டிக் காட்ட வேண்டுமோ என்பது போல இந்த புது முகங்களுக்கும் தமிழருக்குக் காத்து குத்த யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை.
நேரு குணாவின் உண்டியல் கும்பல்களிடம் கனடாவில் வாழும் பல தமிழர்களின் முகவரிகள் உண்டு. புலிப் பினாமிகளாக இருந்து சுருட்டியவர்கள் பலருக்கு இந்த உண்டியல் கும்பல்களோடு மிகுந்த கடப்பாடு உண்டு.
புது முகங்கள் என்று தங்களை அறிமுகப்படுத்தியவர்கள் இப்பொழுது திடீரென்று "அனைத்துலக தமிழர் மாநாடு" நடத்த புறப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இதுநாள் வரையில் எந்தப் பொதுக் கூட்டமும் நடத்தியது கிடையாது. முகவரியும் கிடையாது. பணம் எங்கிருந்து கிடைத்தது? பாட்டுக் கச்சேரிக்கு தமிழ் நாட்டில் இருந்தும் வருகிறார்களாம். ஆட்கடத்தல் செய்ய அருமையான சந்தர்ப்பம். இந்த "அவை" கனடிய வெள்ளையர்களுக்கு அவல் கொடுக்க "உணவு வங்கிகளுக்கு" சேர்த்துக் கொடுப்பதாக விளம்பரம் வேறு செய்கிறார்கள். வன்னியில் பட்டினியாக உள்ளவர்களின் பேச்சையே காணோம்.
இந்த கனடியத் தமிழர் தேசிய அவை திருச்செல்வம், நேரு குணா போன்றவர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் கண்டிப்பாக ஐரோப்பாவில் உள்ள உருத்திரகுமாரன் எதிர்ப்புக் கோஷ்டியான நெடியவன் கும்பலை இந்த மாநாட்டின் மூலம் கனடாவுக்கு வரவழைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் ஐரோப்பாவில் நடந்த கோஷ்டி மோதல்களினால் பொலிசாரால் மோப்பம் பிடிக்கப்படும் நெடியவன் கும்பல் கனடாவில் புனித அகதிகளாக புனர் ஜென்மம் எடுக்க நல்ல வாய்ப்பு என்றும் கருதப்படுகிறது. அதற்குத்தான் இந்த மாநாடு என்றும் அறியப்படுகிறது.
ஆயினும் கனடிய போலீசார் இந்த விஷயங்களை அறிந்துள்ளதாகவும், நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
--கோண்டாவில் கோதண்டராமன்--
0 comments :
Post a Comment