சீனா போர் தொடுத்தால், அதை எதிர்கொள்வதற்கு வசதியாக இந்திய ராணுவம் தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து, அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநர் ஜேம்ஸ் கிளாப்பர் அந்நாட்டு மேலவை புலனாய்வுக் குழு கூட்டத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் சீனா ஆகிய 2 ஆசிய நாடுகளும் வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருந்தாலும், அவ்வப்போது இருதரப்பு உறவில் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, அருணாச்சல மாநிலத்தில் எல்லை பிரச்னை, காஷ்மீர் மக்கள் சீனா செல்வதற்கு தனி விசா, இந்திய ராணுவ அதிகாரி சீனா செல்வதற்கு விசா மறுப்பு என பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இதனால் எல்லைப் பகுதியில் அவ்வப்போது போர் பதற்றம் ஏற்படுகிறது. போர் ஏற்பட்டால் அதை சமாளிப்பதற்கு வசதியாக, இந்தியா தனது ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறது. இவ்விரு நாடுகளிடையே உடனடியாக போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இதுபோல், கிழக்கு ஆசிய கடல் பகுதியில் அமெரிக்க ராணுவத்தை நிறுத்துவதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment