Tuesday, February 7, 2012

டக்ளஸை நம்பாமல் அதிகாரிகளிடம் யாழ் நிலைமைகளை நேரடியாக கேட்டறிந்த ஜனாதிபதி.

வட மாகாண முன்னேற்ற மீளாய்வு கூட்டம், நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான , நிலைமைகள் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டறிந்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

இங்கு கலந்து கொண்ட அதிகாரிகள் அரசாங்கத்தின் பாரிய நிதி ஒதுக்கீட்டினூடாக மேற்கொள்ளப்பட்ட ஏ-9 வீதியின் புனரமைப்பு மற்றும் ஏனைய பணிகளின் இம்முன்னேற்றங்களின் பயன்களை, இன்று மக்கள் அனுபவித்து வருவதாக அதிகாரிகளால் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்ற பணிகள், முழுமையாக பூர்த்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் ஏனைய பிரதேசங்களிலும் மீள்குடியேற்றம் மற்றும் மக்களுக்கு வசதிகளை வழங்குவது தொடர்பாகவும், அங்கு காணப்படுகின்ற நடைமுறைச்சிக்கல்கள் தொடர்பாவும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

இவ்வமர்வில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, பெசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் உட்பட பலரும், இணைந்திருந்தனர்.




No comments:

Post a Comment