நாட்டில் பயங்கரவாதம் மற்றும் மக்கள் கிளர்ச்சி போன்றவை இடம்பெறும் பட்சத்தில் அவற்றை தடுக்க, நாட்டின் சகல மாவட்டங்களிலும் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்த பணிப்புரையினை, அவர் சார்பாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி பாராளுமன்றத்தில் முன் வைத்துள்ளார்.
பயங்கரவாத நடவடிக்கையோ, அல்லது மக்கள் கிளர்ச்சியோ ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 12ம் சரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தஅறிவிப்பு விடுக்கப்படுவதாகவும், இது வழமையான அறிவிப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment