பௌத்த தர்மத்தின் வழியில் தான் வாழ்க்கையை கட்டியெழுப்ப முயற்ச்சி செய்வதாகவும், தொடர்ந்தும் பௌத்த நூல்களை வாசிப்பதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் வினாயக மூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
.லங்காதீப வார இறுதிப்பத்திரிகைக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் அந்தப் பத்திரிகைக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ளதாவது,
நான் புலிகள் அமைப்பில் இருந்தது உண்மை. .புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் நல்லதல்ல என்பதை புரிந்து கொண்டதன் பின்னர் ,அதிலிருந்து விலகி ஜனநாயக வழிமுறைக்கு திரும்பினேன் .
தர்மாசோக அரசனின் மகன் மிஹிது தேரர் இலங்கையில் புத்த சமயத்தை ஸ்தாபிப்பதற்கு அனுப்பப்பட்டார். அவரது மகள் சங்கமித்தை வெள்ளரசு மரக்கிளையை கொண்டு வந்தார் ..தர்மாசோக அரசர் யுத்தத்தை வெறுத்தார் .சத்தியத்தை புரிந்து கொண்டார் .
நான் அவர் போன்று சிறப்பான ஒருவராக இல்லாத போதும் ,யுத்தத்தின் மூலம் ஏற்படும் அழிவை நன்கு புரிந்து கொண்டதன் பின்னர் ஜனநாயக வழிக்கு திரும்பினேன். ஜனநாயக வழிக்கு திரும்பி இந்த நாட்டு மக்களுக்கு பெரிய அர்ப்பணிப்பை செய்துள்ளேன். நான் அது பற்றி கூற விரும்பவில்லை. கொலைகளை செய்த அங்குலிமாலா பௌத்த துறவியாக முடியும் என்றால் , ஏன் என்னை மட்டும் தாழ்த்திப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் கருணா எனப்படுகின்ற வினாயகமூர்த்தி முரளிதரன்.
No comments:
Post a Comment