Sunday, February 26, 2012

லிபியாவை போன்று இலங்கையிலும் ஏற்படுத்த முயற்சி - விமல் வீரவங்ச

இலங்கை தற்போது லிபியா மற்றும் சிரியாவை போல இருப்பதாக சிறை வைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குறிப்பிட்டுள்ளார். அந்த கருத்து வெறுமனே வருவதல்ல என்று அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார் .

அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,

லிபியாவிலும் சிரியாவிலும் உள்ள நிலை உங்கள் எல்லோருக்கம் தெரியும். அன்று லிபியா தனது மக்களுக்கு உயர்ந்த வசதிகளை வழங்கியது. பொது மக்களுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கியது. உள்நாட்டு பல்கலைக் கழகங்களில்வாய்ப்பு கிடைக்காவிட்டால் வெளிநாடுகளில் சென்று கற்பதற்கு நிதி வழங்கியது . எல்லா குடும்பங்களுக்கும் வீடு வழங்கியது. கார் வழங்கியது. அந்த காருக்கு எரிபொருள் வழங்கியது. அங்கு வேலையற்றோர் என்று ஒரு பிரிவினர் இருக்கவில்லை.

அவ்வாறு ஆட்சி புரிந்த நாட்டை 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையான கூலிப்படையினரை கொண்டு ,வெளிநாட்டு சக்திகளுக்கு லிபியாவை நாசப்படுத்த முடிந்தது .தற்போது பொறுப்பேற்றுள்ள ஆட்சியாளர்கள் கூட நாட்டை நிருவகிக்க முடியாதிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர் . லிபியா தற்போது மன நோயாளர் பண்ணையாக மாறியுள்ளது.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எமது நாட்டிலும் லிபியாவை போன்ற நிலைமையை ஏற்படுத்த சில பிரிவினர் எதிர்பார்த்துள்ளனர் .இதற்கு 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வரை இருந்தால் போதுமானது .

எமது நாட்டை மேலைத்தேய நாடுகளுக்கு செய்தி வழங்கும் நாடாக மாற்றவே அவர்கள் முயற்ச்சிக்கின்றார்கள். “இலங்கை அரசாங்கத்தின் தலைவர்களுக்கு , இராணுவ முக்கியஸ்த்தர்களுக்கு , சர்வதேச மனித உரிமை பேரவையின் முடிவாக பிடியாணை வழங்க உத்தரவு” என்ற செய்தி ஒரு பக்கமாக வெளி வரும் போது, “மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ளமை போன்று மக்கள் புரட்சி இலங்கையிலும் ஏற்பட்டுள்ளது” என்ற செய்தியை வெளியிடுவதே அவர்களது திட்டமாகும் .

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிராக மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டமும் இதற்கான ஒத்திகையாகும் .தேர்தலில் வெற்றி பெற முடியாமையினால் தற்போது பல்வேறு திட்டங்கள் மூலமாக அதனை செய்ய முயற்சி செய்கிறார்கள் .

இந்த யுகம் நாங்கள் எல்லோரும் அவதானமாக இருக்க வேண்டிய யுகமாகும். இந்த திட்டங்களை வெற்றி கொள்ளக்கூடிய மக்கள் சக்தியை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டும் .இல்லையேல் இந்த நாடு இருண்ட பாதாளத்தில் விழுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment