Wednesday, February 15, 2012

மகேஸ்வரன் வழியில் செல்லும் மாகாண சபை உறுப்பினர்களுக்குப் புண்ணாக்கு மானியமாம்.


கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக பாராளுமன்றுக்கு தெரிவாகியிருந்த மகேஸ்வரன், தனது முதலாவது பாராளுமன்ற அமர்வுக்கு வெள்ளவத்தையிலிருந்து மாட்டுவண்டியில் சென்றிருந்தமை யாவருக்கும் ஞாபகம் இருக்கும். அந்த வரிசையில் எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடமத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலர் நேற்று (14) மாகாண சபை கூட்டத்துக்கு மாட்டு வண்டிகளில் சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக கருத்துரைத்துள்ள வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திசாநாயக்க எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு புண்ணாக்கு மான்யம் வழங்கும் ஆலோசனை ஒன்றினைத் தான் முன்வைக்கவுள்ளேன் என்று நேற்று தெரிவித்துள்ளார்..

இதேவேளை, எரிபொருள் விலையைக் கணடித்து தென் மாகாண சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களான பண்டாரிகொட, ஹெட்டியாராச்சி, கிருஷாந்த புஷ்பகுமார ஆகியோரும் நேற்று மாகாண சபை கூட்டத்துக்கு மாட்டு வண்டியில் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment