கிழக்கில் சிங்களவர்களின் காணிகள் கொள்ளையிடப் படுவதாக தெரிவித்து மட்டக்களப்பு மங்கலாராம பௌத்த விகாரையின் பிரதான பௌத்த பிக்கு அம்பிட்டியே சுமன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். சில தமிழ் குழுக்கள் திட்டமிட்டு சிங்களவர்களின் காணிகளை கைப்பற்றுவதுடன், பௌத்த விகாரைகளுக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தப்படுவதாக குறித்த பிக்கு குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறிவித்த போதிலும், உரிய தீர்வு கிடைக்கவில்லை எனவும் இதனால் சாகும் வரையில் உண்ணா நிலைப் போராட்டத்தை தொடரப் போவதாகவும் பௌத்த பிக்கு அறிவித்துள்ளார். இதேவேளை, இந்த உண்ணா நிலைப் போராட்டத்தை நிறுத்துமாறு சில தினங்களாக இனந்தெரியாத ஒருவர் பௌத்த பிக்குவை தொலைபேசி மூலம் மிரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப் போவதில்லை எனவும் நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்யத் தயார் எனவும் பிக்கு குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment