பசுமை கட்சியின் செனட் சபை உறுப்பினர் லீ ரஹியனால் , செனட் சபையில் பிரேரணையொன்றை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்ற நோக்கத்தில் மேற்படி பிரேரணையை சமர்ப்பித்த அவர் சபையில் உரையாற்றுகையில், இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் யுத்த குற்றச்செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கும், சுதந்திர, சர்வதேச முறையொன்று தயாரிக்கப்பட வேண்டுமன வேண்டியுள்ளார். அத்துடன் அதனை ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்பித்து, இலங்கைக்கு எதிராக செயற்படவேண்டும் எனவும் முன்மொழிந்துள்ளர்.
எது எவ்வாறாயினும் இவரது பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இப்பிரேரணைக்கு, ஆதரவாக 11 வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளதுடன் எதிராக, 30 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment