சுற்றுலா மையமாகும் முல்லைத்தீவு கொக்கிலாய் மற்றும் நாயாறு களப்புப்பகுதி.
மகாவெலி எச். வலயத்திற்குட்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்கிலாய் மற்றும் நாயாறு பகுதிக்கிடையில் காணப்படுகின்ற 500 ஹெக்டெயார் விஸ்தீரணம் உள்ள நிலப்பிரதேசத்தை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்ய இலங்கை மகாவெலி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கை மகாவெலி அதிகார சபைக்குரிய இபபிரதேசத்திற்குள் சுற்றுலா கைத்தொழிலை முன்னேற்றுவது தொடாபாக கண்டறியும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
பல ஆண்டுகளாக பயங்கரவாத செயற்பாடுகளினால், பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதனூடாக, சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கும், நேரடி பஙகளிப்பை பெற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்க்கும் சுற்றுலாத்துறை இதனால் மேலும் பிரதேச மக்கள் தொழில் வாய்ப்புக்களையும் பல்வேறுபட்ட பலன்களையும் பெறுவர் எனத் தெரிவிக்கின்றது.
0 comments :
Post a Comment