ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரியவை , மஹர தேர்தல் தொகுதியின் ஐ.தே..க அமைப்பாளராக நியமிப்பதற்கு அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள தீர்மானத்தினை கருஜயசூரியவின் அணியினர் ஏற்றுக்கொள்ள இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரியவருகிறது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற ஐ.தே.க.வின் கட்சித் தலைவர் தெரிவின் போது பிரதித்தலைவர் பதவியிலிருந்தும், நிறைவேற்று குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் மிகவும் சூட்சுமமான முறையில் கரு ஜயசூரியவை நீக்குவதற்கு எதிர்கட்சிதலைவர் ரணில் விக்கரமசிங்க மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர் , கட்சி அமைப்பாளர்களை நியமிக்கும் போதும் , கரு ஜயசூரியவுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் ரணில் விக்கரமசிங்க செயற்பட்டுள்ளதாக கரு ஜயசூரியவின் அணியினர் கருதுகின்றனர்.
No comments:
Post a Comment