Wednesday, February 1, 2012

நான்குஅரசியல் கட்சிகளின் பதிவுகள் ரத்து

தேர்தல் செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டுள்ள நான்குஅரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்வதற்கு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தயாராகி வருகிறார்.

தற்போது பதிவுகளை மேற்கொண்டுள்ள அரசியல் கட்சிகள் வருடாந்தம் அவற்றின் நான்கு அறிக்கைகளை தேர்தல் செயலகத்திற்கு முன்வைக்க வேண்டும்.

கட்சியின் வருடாந்த கணக்கறிக்கை, உறுப்பினர் குழாமிம் தகவல், அரசியல் நடவடிக்கை தொடர்பான அறிக்கை என்பன இதன்போது சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிந்தியசெய்தி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ), தமீழிழ விடுதலை புலிகளினால் ஸ்தாபிக்கப்பட்ட விடுதலை புலிகள் மக்கள் முன்னணி மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல.எவ்) ஆகிய கட்சிகளின் பதிவுகளை தேர்தல் திணைக்களம் இன்று புதன்கிழமை இரத்து செய்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com