Friday, February 24, 2012

வடகிழக்கைச் சேர்ந்த மதுவரி உத்தியோகித்தர்களுக்கு விசேட பயிற்சி.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான 4 நாள் பயிற்சிபட்டறை, யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஆரம்பமாகியுள்ளது. வட மாகாண உதவி ஆணையாளர் கிறிஸ்டியோசப்பினால், பொது நிர்வாக முகாமைத்துவ பயிற்சியும், நீதித்துறை முகாமைத்துவ பயிற்சியும், மதுவரி சட்டமுறை கட்டளை பயிற்சியும் வழங்கப்படவுள்ளவென்று திணைக்கள வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள், மீள்குடியேறியுள்ளனர். இவர்களில் சிலர், சட்டவிரோதமான மதுபான உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை இனங்கண்டு, சமுதாயத்தில் நற்பிரஜையாக்குவது எமது நோக்கமென்று கிறிஸ்டோப் தெரிவித்துள்ளதுடன் கடந்த ஆண்டு வட மாகாணத்தில் 300 பேர், இவ்வாறான சட்டவிரோதமான செயல்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இப்பயிற்சி பட்டறைக்கு யாழ். மாவட்ட மதுவரி அத்தியட்சகர் சோதிராஜன், வட மாகாண பிரதி மதுவரி ஆணையாளர் ரீ. மல்லவா உட்பட பலர், கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment