பால்மாவின் விலையும் அதிகரிக்கும்?
பால்மாவின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
பால்மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவிக்கின்றது.
பால் மா உற்பத்தி நிறுவனங்கள் விடுத்துள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நூகர்வோர் அதிகார சபையின் தலைவர் ரூமி மர்சூக் கூறியுள்ளார்.
விலை அதிகரிப்பு தொடர்பில் குறித்த நிறுவனங்களிடம் மேலும் பல தகவல்களை கோரியுள்ளதாகவும் ரூமி மர்சூக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த தகவல்கள் கிடைத்த்தன் பின்னர் விலை திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியுமென நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, எரபொருள் வலை அதிகரிப்பு மற்றும் ரூபாவின் பெறுமதி குறைப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுனர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
0 comments :
Post a Comment