Friday, February 24, 2012

பூமியை போல தண்ணீருடன் இன்னொரு உலகம்

பூமியில் இருந்து 20 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு புதிய கோளை விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்திருந்தனர். அதற்கு ஜி.ஜே.1214-பி என்று பெயரிட்டிருந்தனர். அந்த கோலை விஞ்ஞானிகள் முழுமையாக ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

இதனால் அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அந்த கோளில் வெப்பநிலை 200 டிகிரி வரை இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். புதிய கோள் பூமியை விட 2.7 மடங்கு பெரிதாக உள்ளது. அதே நேரத்தில் பூமியை விட 8 மடங்கு எடை அதிகமாக இருக்கிறது.

No comments:

Post a Comment