யாழ்.மாவட்டத்தில் மீண்டும் மலேரியா நோய் பரவுவதற்கான சாதகமான சுழ்நிலைகள் காணப்படுவதாக யாழ்.மாவட்ட மலேரியா கட்டுப்பாட்டுப்பிரிவின் வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவிற்கு சென்று திரும்பியவர்களாலும் இந்தியாவில் இருந்து இங்கு வந்து செல்லுகின்றவர்களாலும் இந்நோய் பரவுவதற்கான சூழ் நிலைகள் தற்போது ஏற்பட்டன.
இந்நோய் இந்தியாவில் முழுமையாக கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என்பதால் இவர்கள் மூலம் இந்நோய் கிருமிகள் இங்கு காவிகொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன
ஆபிரிக்காவிற்கு சென்று வந்தவர்களில் ஒரு சிலர் மூறை மலேரியாவை காவிக்கொண்டு வந்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
எனவே வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள் தமது உடலில் ஏதாவது வித்தியாசமான மாற்றங்கள் காணப்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சென்று தம்மை பரிசோதனை செய்து கொள்வதன் மூலமாக இந்நோயின் தாக்கம் மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.
ஆயினும் யாழ்ப்பாணத்தில் மலேரியா நோயின் தாக்கம் முன்னர் ஏற்பட்ட போதும் அவை முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன என்பதும் முக்கியமானது.
No comments:
Post a Comment