சம்பந்தன் - ஜனாதிபதி சந்திப்பு! பின்கதவால் போனாரா? வீடியோ இணைப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர் சம்பந்தனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களுக்குமிடையேயான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் எவ்வாறன விடயங்கள் பேசப்பட்டது என்ற தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
சந்திப்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இவ்விடயம் இவ்வாறிருக்க நேற்று சம்பந்தன் ஜனாதிபதியை சந்தித்து வெளியேறி சில நிமிடங்களில் தமிழ் ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளில் ஜனாதிபதியினால் சம்பந்தனை சந்திப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாகவும் அதனை அவர் நிராகரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிந்தது. மேலும் அச்செய்திகளில் எதிர்வரும் ஐ.நா பாதுகாப்புச் சபை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவு தேடுவதற்காகவே சம்பந்தனை அழைத்திருந்ததன் நிமிர்த்தமே அவர் அழைப்பை நிராகரித்திருந்தாகவும் குறிப்பிட்டிருந்தது.
அவ்வாறாயின் கீழே காணப்படும் வீடியோவில் சம்பந்தன் ஆமா சாமி போடுவது எதற்காக என்ற கேள்வியை மேற்கண்ட ஊடகங்களை நோக்கி எழுப்ப இலங்கைநெற் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment