இலங்கைப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த மூன்று அரபு இளைஞர்கள் கைது
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் சேவையாற்றிய இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரை பாலியல்வன்முறைக்கு உட்படுத்த முயற்சி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய அந்நாட்டைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சாஜா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தூதுவராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பிட்ட பெண் பணிபுரிந்த வீட்டில் பொருட்களைத் திருடிச் செல்வதற்காக வருகை தந்த இந்த இளைஞர்கள் அப்பெண்ணை பாலியல்வன்முiறைக்கு உட்படுத்த முயற்சி செய்தது தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டைக் கொண்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்பெண் பணிபுரிந்த வீ;ட்டில் யாருமில்லை என அறிந்து கொண்டு அந்த மூன்று இளைஞர்கள் புகுந்து பலாத்காரம் புரிந்துள்ளதாக வீட்டு உரிமையாளர் விளக்கமளித்துள்ளதுடன் அவர் அது பற்றி பொலிஸில் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.
தம் வீட்டுக்கு வருகை தந்தபோது பணிப்பெண் கதிகலங்கி நின்றதாகவும் அது குறித்து விசாரணை செய்த போது அறிமுகமற்ற மூன்று நபர்கள் வருகை தந்து தன்னை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளதாக வீட்டு உரிமையாளர் சாஜா பொலிஸில் முறைபாடு தெரிவித்துள்ளாதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment