இந்த ஆண்டு ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. தட்ப வெப்ப நிலை மைனஸ் 30 டிகிரி ஆக குறைந்துள்ளது. இதனால் ரோடுகளிலும், வீட்டின் கூரைகளிலும் பனி கொட்டிக்கிடக்கிறது. இங்கிலாந்து, இத்தாலி, உக்ரைன், சுவிட்சர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
உக்ரைனில் மட்டும் கடும் குளிருக்கு 100 பேர் பலியாகி உள்ளனர். ஐரோப்பா கண்டம் முழுவதும் இதுவரை 500 பேர் உயி ரிழந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக இங்கிலாந்தில் கடும் பனி கொட்டுகிறது. இதனால் ரோடுகளில் 16 செ.மீட்டர் உயரத்துக்கு பனி படர்ந்து மூடிக்கிடக்கிறது.
தொடர்ந்து பனி மழை பொழிகிறது. இதனால் அங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரோடுகளில் பனி மூடிக்கிடப்பதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. அதனால் தெற்கு ஸ்காட்லாந்து, வேல்ஸ் தென்கிழக்கு, இங்கிலாந்து பகுதிகளுக்கு செல்ல முடியாமல் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கார்களை இயக்க முடியாமல், ரோடுகளில் ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால் காருக்குள்ளேயே இரவு பொழுதை கழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடும் பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்தில் ஹீத் ரோவில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு புறப்படும் 1200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு செல்லக்கூடிய விமானங்கள் செல்ல முடியவில்லை. இதன் மூலம் இங்கிலாந்து மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment