தாய்லாந்தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலயத்தின் எதிரில் இலங்கையர் ஒருவர் புலிடம் கோரி போராட்டம் நடத்தி வருவதாகத் பாங்கொக் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் புகலிடம் வழங்கப்படாவிட்டால் தீக்குளிக்கப் போவதாக, குறிப்பிட்ட நபர் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 வயதான கவினமுதம் தேவகுமார் என்ற இலங்கையரே இவ்வாறு போராட்டம் நாடாத்தியுள்ளார். இவருடன் , அவரது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளும் போராட்டத்தில் இணைந்திருந்துள்ளனர்
கையில் 2 லீட்டர் பெற்றோலைக்கொண்ட ஒரு கலனை வைத்துக்கொண்டு தனது நிபந்தனை நிறைவேற்றப்படாவிட்டால், உடலில் எண்ணையை ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்,
ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் மீளவும் தம்மையும் தமது குடும்பத்தாரும் இலங்கைக்கு நாடு கடத்தக் கூடுமென தேவகுமார் அச்சம் வெளியிட்டுள்ளார்.
புகலிட விண்ணப்பம் உரிய தகுதிகளைக் கொண்டிருந்தால் புகலிடம் வழங்கப்படும் என அதிகாரிகள், தேவகுமாரிடம் வாக்குறுதியளித்துள்ளனர்.
தேவகுமாரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும், குடும்ப உறுப்பினர்கள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment