நீர்கொழும்பு கல்வி வலய தமிழ் மொழி பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலருக்கு வலயத்திற்குள் உள்ளக இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பி . புஷ்பகுமார
இடமாற்றல் பெற்றுள்ள ஆசிரியர்களின் பெயர்பட்டியல் அடங்கிய கடிதத்தை 31.1.2012 ஆம் திகதியிட்டு பாடசாலை அதிபர்கள் ஊடாக குறித்த ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதன்படி. நீர்கொழும்பு ,கட்டானை கோட்டங்களில் உள்ள தமிழ் மொழிப்பாடசாலைகளை சேர்ந்த 18 ஆசிரியர்களுக்கான இடமாற்றல்கள் மேன்முறையீட்டின் பின்னர் உறுதி செய்து அனுப்பப்பட்டுள்ளன.
இந்த ஆசிரியர்கள் நீர்கொழும்ப வலயத்தில் உள்ள விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி , அல்ஹிலால் மத்திய கல்லூரி, அல்பலாஹ் மகா வித்தியாலயம் ,தோப்பு ரோமன் கத்தோலிக்க தமில் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு உள்ளக இடமாற்றங்கள் பெற்றுள்ளனர் .
இடமாற்றல் பெற்றுள்ள ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கடமையை உடன் பொறுப்பேற்குமாறு வலய கல்விப்பணிப்பாளரால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு வலய தமிழ் மொழி பாடசாலைகளில் பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோருக்கு முதல் தடவையாக இந்த வருடம் இடமாற்றல்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment