சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒப்பந்தம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஸா டி சில்வாவுடன் விவாதிக்க பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஒப்புக்கொண்டுள்ளார்.
அண்மையில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை மேற்குறித்த பகிரங்க விவாதத்துக்கு ஹர்ஸா டி சில்வா அழைத்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் முகமாகவே அரசு அஜித் நிவாட் கப்ராலுக்கு பதிலாக பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இவ்விவாதத்துக்கு தயாரென தெரிவித்துள்ளார்.
இந்த விவாதத்தை “சிரஸ” தொலைக்காட்சி சேவையில் எதிர்பாருங்கள் என்று அந்த ஊடகம் இன்று அறிவித்தது.
No comments:
Post a Comment