இந்துருவௌ அரச வைத்தியசாலைக்கு அருகில் வைத்து 50 கிராம் ஹெரொயின் பக்கட்டுடன் அரபி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் மோட்டார் வாகனத்தை நிறுத்தி சாரதி அனுமதிப் பத்திரத்தை பரிசோதனை மேற் கொண்டபோது வாகனத்தில் போதைப் பொருள் பாவனைக்காகப் பயன்படுத்தும் ஈயத் தாள் மற்றும் குழாய் காணப்பட்டதை அடுத்து வானத்தைச் செலுத்தி வந்த அரபியின் கால் சட்டையினை சோதித்துப் பார்த்த போது அதில் 50 ஹெரொயின் பெக்கட்டுகள் கண்டு பிடிக்கப்பட்டதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் சிங்களப் பெண்மணி ஒருவரை திருமணம் முடித்த 29 வயதுடையராவர்.
மேலதிக விசாரணைகளை கொஸ்கொட பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment