ஜெனீவா தீர்மானத்தைக்கண்டித்து யாழ்ப்பாண அரச ஊழியர்கள் போராட்டம்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக்கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்ட அரச ஊழியர்கள் அனைவரும் இன்றைய தினம் போராட்டங்களை மேற்கொண்டனர்.
இன்று மாலை 3 மணியளவில் பிரதேச செயலகங்கள் தோறும் பிரதேச செயலாளர்கள் தலைமையில் இப்போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை போராட்டங்களை மேற்கொண்ட இவர்கள் பேரணியாக அருகிலுள்ள கோயில்களுக்கு சென்று அங்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.
யாழ்.மாவட்டச்செயலகத்திலும் இப்போராட்டம் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்றதோடு விசேட பூஜைகள் வழிபாடுகளும் இடம்பெற்றன.
இதேவேளை இவ்வாறான போராட்டங்களும் பிரார்த்தனைகளும் ஏனைய கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களிலும் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment